இலங்கையில் பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் எடை கொண்ட பால்மா பக்கெட் ஒன்றின் புதிய விலை 325 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதன் படி 400 கிராம் எடை கொண்ட பால்மா பக்கெட் ஒன்றின் விலை 61ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 163 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பை ஒன்றினை 70 ரூபாவினால் அதிகரிக்கவும் நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply