தென்னாப்பிரிக்க சிறையில் அஹிம்சைவாதி காந்தியின் சிலை
சுமார் 100ஆண்டுகளுக்கு முன்பு காந்திஜி அடைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பழைய கோட்டைச் சிறையில் இப்போது அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
அந்தச் சிலையை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று திறந்து வைத்தார். தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றிவரும் காந்திஜியின் கொள்ளுப்பேத்தி கீர்த்தி மேனனும் இந்த நிகழ்ச்சியின்போது உடனிருந்தார்.
1908 முதல் 1913 வரையிலான காலகட்டத்தில் 4 முறை இந்தச் சிறையின் 4 ம் எண் அறையில் காந்திஜி அடைக்கப்பட்டிருந்தார். அதே இடத்தில் இப்போது அவருக்குச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. கெளிதம் பால் வடிவமைத்த இந்த மார்பளவுச் சிலை, இந்திய கலாசார உறவுக் குழுவின் சார்பில் தென்னாப்பிரிக்க அரசியல் சாசன நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நிறவெறி ஆட்சி மாறியபிறகு, தென்னாப்பிரிக்காவின் அரசியல் சாசன நீதிமன்றமாக இந்தச் சிறை மாற்றப்பட்டுவிட்டது.
சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதிபா பாட்டீல், ‘தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய நெல்சன் மண்டேலாவும் இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்´´என்று நினைவுகூர்ந்தார்.
‘வன்முறையற்ற அமைதி வழியிலான பேச்சுகள் மூலம் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்கிற உண்மையை முதல்முதலாக உலகுக்கு காந்திஜி உணர்த்தியது தென்னாப்பிரிக்காவில்தான்´´என்றார் பிரதிபா பாட்டீல்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply