கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் கருணாநிதி சாதிக்கப்போவது என்ன ?
ஆட்சியில் இருக்கும்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது தனி ஈழம் பற்றி பேசுவது ஏன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இடிந்தகரையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து 4வது நாளாக உண்ணாவைரதம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய சீமான்:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டம் வெற்றி அடையும். மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் போராட்டம் இது. கூடங்குளம் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை கவனிக்கத் தவறிவிட்டன.
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியில் இருந்தபோது குரல் கொடுக்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது தனி ஈழம் அமையவேண்டும் என்று குரல் கொடுக்கிறார். இதன் மூலம் இரட்டை வேடம் போடுகிறார் என்று தெரிகிறது.
இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இடைத்தேர்தல் என்று வந்தால் ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள்இமற்றும் முதல் அமைச்சர் வரை பிரச்சாரத்திற்குச் செல்கிறார்கள். கூடங்குளம் போராட்டம் பற்றி எந்த அமைச்சராவது ஏதாவது கேட்டார்களா?
மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க, குறைகளை கேட்க வருவதில்லை. ஓட்டு வாங்க மட்டும் மக்களைச் சந்திக்க வருகிறார்கள். மக்கள் பிரச்சனைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. என்று பேசியுள்ளார் சீமான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply