மாகாணசபை ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவைக்கூட கொடுக்க முடியாதளவு பாரிய நிதிப் பற்றாக்குறை:விமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்
மாகாணசபை ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவைக்கூட கொடுக்க முடியாதளவு பாரிய நிதி நெருக்கடியொன்றுக்கு கிழக்கு மாகாணசபை முகம்கொடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
கிழக்கு மாகாணசபைக்கென ரூபா 836மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் ரூபா 200 மில்லியன் மாத்திரமே வழக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி இல்லையெனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் மாகாண சபை உறுப்பினர், தேச நிர்மாண அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆணையாளருக்கு தலா 5 மில்லியன் ரூபாவினை வழங்குமாறு அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மாகாணசபையின் கீழ் இயங்கும் சுகாதார ஊழியர்களின் போனஸ் கொடுப்பனவுக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த 6மாதங்களாக இவற்றுக்கான நிதி வழங்கப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply