பதிவு செய்யப்படாத வாகனத்தை வைத்திருந்து அபராதம் செலுத்திய யாழ் பாராளுமன்ற உறுப்பினர்
பதிவு செய்யப்படாத வாகனத்தை செலுத்திச் சென்ற மற்றும் அவ்வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப் பாராளுமன்ற உறுப்பினர் கடந்த மாதம் பதிவு செய்யப்படாத வாகனமொன்றை செலுத்திச் சென்றதாக குற்றச்சாட்டப்பட்டு களுத்துறையில் தடுத்துவைக்கப்பட்டார்.
பதிவு செய்யப்படாத வாகனத்தை வைத்திருந்த குற்றத்தின் காரணமாக களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
எனவே அரச கட்டணமான 2500 ரூபாவை செலுத்துமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply