கவனம்! இராமேஸ்வரம் கடல் சீற்றம் கொண்டுள்ளது
இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி மற்றும் மண்டபம் பகுதிகளில் இன்று காலை முதல் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாம்பன் என்ற பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக பௌர்ணமி நாட்களில் கடல் அலைகளின் சீற்றம் சற்று அதிகமாகவே காணப்படும்.
எனினும் இன்றைய தினம் கடலின் சீற்றம் மிக அதிகமாக இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply