யாழில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை!
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தங்களுக்கு போதுமாதனாக இல்லை என வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்.சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் கூறினார்.
யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களினால் மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அண்மையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்துள்ளோம். விரைவில் யாழ்.போதைப் பொருட்களை முற்றாக இல்லாது ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்
மக்களின் சொத்துக்கைளைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் கண்விழித்து இருக்கின்றோம். யாழில் எந்த இடத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்தாலும் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவலைக் கொடுங்கள்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தயங்காமல் தங்கள் முறைப்பாடுகளை தமிழில் பதிவு செய்யலாம் என்றார்.
இந்த சந்திப்பில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா, யாழ். சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் குகநேசன், யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply