தென்கொரிய விடுதி தீ விபத்தில் பணிக்காக சென்ற இலங்கையர் மூவர் பலி
தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள கொராகே விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் மூன்று இலங்கை பணியாளர்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகியுள்ளதோடு 25ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கொரிய நேரப்படி சனிக்கிழமை இரவு 8.55 அளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ 28 அறைகளுக்கு பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவினால் ஏற்பட்ட நச்சு வாயுவை சுவாசித்ததன் மூலம் 7 ஆண்களும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரின் நிலை கவலைக்கிடம் எனவும் ஏனையோருக்கு உயிராபத்து இல்லை எனவும் தென் கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ புகையில் இருந்து தப்பிக்க வழியில்லாமையே இழப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
தீ ஏற்பட்டதன் பின்னர் அவ்விடத்திற்கு சுமார் 20 தீயணைப்பு வண்டிகளில் வந்த 100 தீயணைப்பு வீரர்கள் 10 மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் தென் கொரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply