பருமனான பெண்களை ​வேலைக்கு நியமிப்பதில் நிறுவனங்கள் பாரபட்சம்

நிறுவனங்கள் பருமனான பெண்களை வேலைக்கு எடுப்பதில் பாரபட்சம் பார்ப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்ட புகைப்படத்துடனான பெண்களின் விண்ணப்பங்கள் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில் நிறுவனங்கள் பருமனான பெண்களை வேலைக்கு எடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஊதியம், பொறுப்பு வழங்குதலில் கூட பாரபட்சம் பார்க்கபடுவதாக ஆய்வு கூறுகிறது. இதனால், குறைந்த ஊதியம் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.

முன்னதாக, விண்ணப்பிப்பவரின் புகைப்படங்கள் இருவிதமாக அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர் தனது முந்தைய புகைப்படத்துடன் ஒரு விண்ணப்பமும், அறுவை சிகிச்சைப்பிறகான புகைப்படத்துடன் இன்னொரு விண்ணப்பமும் அனுப்பப்பட்டது.

அதில், பருமனான உருவம் கொண்ட பெண்களுக்கு வேலைக்கு தேர்வு செய்வதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply