பிரான்சின் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று
பிரான்சில், ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 28ஆம் திகதி நடந்தது. அதில் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்காய்ஸ் ஹோலண்ட் 28.6 சதவீதம் வாக்குகள் பெற்றார்.
ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கோலஸ் சர்கோசி 26.2 சதவீதம் அதாவது 2 சதவீதம் வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கினார். மற்றவர்கள் இவர்களைவிட குறைவான வாக்குகளை பெற்றனர்.
இதையடுத்து 2-வது கட்ட தேர்தல் இன்று நடந்தது. பிரான்ஸ் நாட்டு சட்டப்படி தேர்தலில் 20 சதவீதத்துக்கும் மேல் பெறுபவர்கள் 2-வது கட்ட தேர்தலில் போட்டியிட முடியும் அதன்படி இவர்கள் இருவர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர்.
எனவே, இன்று வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்று வெளிநாடுகளில் வாழ்பவர்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடக்கிறது. இதையடுத்து 2 மணி நேரம் கழித்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
முதல்கட்ட தேர்தலில் அதிபர் சர்கோசி 2 சவீதம் வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். அதை தொடர்ந்து அவர் 2-வது கட்ட தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அவரது பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. டி.வி.யில் சோசலிஸ்டு கட்சியை சேர்ந்த ஹோலண்டுடன் நடந்த விவாதத்திலும் தோல்வி அடைந்தார்.
மேலும், சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பிலும் சர்கோசிக்கு போதுமான ஆதரவு இல்லை. எனவே, தேர்தலில் வெற்றி பெற்று சர்கோசி மீண்டும் அதிபராவது கேள்விக்குறியாக உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply