இலங்கை நட்பு நாடா யோசித்துப் பாருங்கள்! தா.பாண்டியன் ஆலோசனை

இலங்கை அரசை நட்பு நாடா என்பதை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேட்டுள்ளார். மூன்று ஆண்டுகளாக முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசு, இலங்கை அரசை நட்புக்குரிய நாடா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஈழத்தில் எத்தகைய ஆட்சி வேண்டும் என்பதை ஈழ மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று கட்சி முடிவு செய்திருக்கிறது.

அதிமுகவில் இலவச ஆடு கொடுப்போம், மாடு கொடுப்போம் என்று சொல்லி ஓட்டு கேட்கிறார்கள்.

அதுபோல் எங்களால் ஓட்டு கேட்க முடியுமா? பயம் கருதி தேர்தலை புறக்கணிக்கவில்லை.

அவமதிப்பிற்கு ஆளாக கூடாது என்று கருதிதான் புறக்கணிக்கிறோம். தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply