முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும்
இலங்கையில் 3 ஆண்டுகளாக முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நட்புக்குரிய நாடா என்பதை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் எத்தகைய ஆட்சி வேண்டும் என்பதை அங்குள்ள மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply