கிழக்கு முதல்வரின் பிரத்தியேகச் செயலரின் வாகனச் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம்: திருமலையில் மூவர் கொலை
திருகோணமலை, மட்டக்களப்புப் பிரதேசங்களில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்.
மூதூர், மல்லிகைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்றில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவரும் இரு சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். காயமடைந்த மேலுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேகச் செயலாளரான சீலனின் வாகனச் சாரதியான எஸ்.முரளிதரன் மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் கல்லடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர்,மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று காலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் சென்று இவரைப் பார்வையிட்டார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply