பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துக் கோரி நிராகரிக்கப்பட்ட 140 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துக் கோரி நிராகரிக்கப்பட்ட 140 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர். 

துபாய்க்கு அனுப்பப்பட்டவர்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் உள்ளடங்குவதாக கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருக்கும் பிரித்தானிய வழக்கறிஞர் ஒருவர், இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் மோதல்கள் நடைபெறும் பகுதியைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகக் கூறியுள்ளார்.

தமது பகுதிகளில் தொடர்ந்தும் மோதல்கள் நடைபெறுவதாக அவர்கள் எடுத்துக் கூறியபோதும் பிரித்தானிய அதிகாரிகள் அதனைச் செவிமடுக்கவில்லையென அந்தச் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவைப் பேன்று பிராஜன்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தமது நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply