பலமுள்ள அரசு உள்ள நாடு ஒன்றில் பலமுள்ள எதிர்க் கட்சியொன்று இருக்க வேண்டியது அவசியம்:மைத்திரிபால சிறிசேன

அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமான், சந்திரகாந்தன் தலைமையிலான கட்சிகளுடன் 11 முக்கிய கட்சிகள் இம்முறை தேர்தலில் அரசாங் கத்துக்கு ஆதரவு வழங்குவதால் இரு மாகாண சபையிலும் எவ்வித போட்டியுமின்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டுமென சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

துரதிஷ்டவசமாக பலமான எதிர்க் கட்சியொன்று இல்லாமையும் அரசாங்கத்துக்குப் பெரும் குறை பாடுதான். அரசாங்கத்திற்கும் எதிர்க் கட்சிக்கு மிடையிலுள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கு முள்ள பாரிய ஒன்றாக உள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, ராஜித சேனாரத்ன, ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவர் அதுரலியரதன தேரர் எம்.பி ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

பலமுள்ள அரசு உள்ள நாடு ஒன்றில் பலமுள்ள எதிர்க் கட்சியொன்று இருக்க வேண்டியது அவசியம். அரசாங்கத்தின் குறை நிறைகளை சுட்டிக்காட்டுவதற்கு பலமான எதிர்க் கட்சியொன்று ஜனநாயக நாடொன்றின் முக்கிய தேவையாகிறது. துரதிஷ்டவசமாக இலங்கையில் அவ்வாறில்லை என்பது கவலைக்குரியதுதான்.

தேர்தல் நடைபெறவுள்ள இருமாகாணங்களிலும் எதிர்க் கட்சி எந்த சுறுசுறுப்புமின்றி மிகவும் வரட்சி நிலையிலேயே காணப்படுகின்றது. அரசாங்கமோ நூற்றுக்கு நூறு என்ற ரீதியில் மக்கள் அபிமானத்தைப் பெற்றுத்திகழ்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் பல்வேறு தடைகள் சவால்களுக்கு மத்தியிலும் முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தி, கிராமிய மட்ட அபிவிருத்திகளே காரணம். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவதுடன் அரசின் மீது முழுமையான நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பல தடைகள் சவால்களுக்கு மத்தியிலேயே அரசாங்கம் வெற்றிபெற்றது. எனினும் அன்று ஐ.தே.க.வில் இருந்த 33 பேர் இன்று எம்முடனுள்ளனர். அப்போதும் எம்முடன் நான்கு கட்சிகளே இருந்தன. இப்போதோ11 கட்சிகள் எம்முடன் உள்ளன.

கடந்த சில தினங்களில் ஆயிரக்கணக்கான எதிர்க் கட்சியினர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். கண்டியில் மட்டும் ஐ.தே.க.வைச் சேர்ந்த 6103 பேர் இவ்வாறு வந்துள்ளனர்.

இதில் 29 பேர் பிரதேச சபை உறுப்பினர்களாவர். மாத்தளை மாவட்டத்தில் ஜே.வி.பி. அபேட்சகராக இருந்தவரும் இன்று எம்முடன் நுவரெலியா, மாத்தளை உட்பட சகல பகுதிகளிலும் இன்னும் பெருந்திரளானோர் எம்முடன் இணையவுள்ளனர். இது ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

இன்று பாராளுமன்றத்தில் ஒரு பலமான எதிர்க் கட்சி இல்லாத குறையுள்ளது. மக்களின் எண்ணங்களிலொல்லாம் ரணில் விக்கிரமசிங்க தமது 2 1/2 வருட ஆட்சிக் காலத்தில் முழு நாட்டையும் காட்டிக்கொடுத்துள்ளார் என்பதே நிறைந்துள்ளன.

நாட்டு மக்கள் கட்சியை விட நாட்டையே முதலிடத்தில் வைத்துப் பார்க்கின்றனர். அரசாங்கத்துடன் இத்தேர்தலில் இணைந்தவர்கள் மீண்டும் எதிர்க் கட்சிக்குப் போகமாட்டார்கள். அரசுக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply