புலிகளுடனான மோதலில் காயமடைந்த இராணுவ வீரர்கள் இருவரையும் வவுனியா அழைத்து வர ஏற்பாடு:அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் இரு இராணுவ வீரர்களையும் வவுனியாவுக்கு அழைத்து வர அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மனிதவள மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

புலிகளுடனான மோதலில் காயமடைந்த இவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவ தாகவும் வவுனியாவுக்கு அவர்களை அழைத்து வருவதற்கு ஐ. சி. ஆர். சி. உரிய ஒத்துழைப்பை வழங்க தவறிவிட்டதாகவும் அவர் கூறினார். இது குறித்து மேலும், கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

சமன் புஷ்பகுமார எனும் இராணுவ வீரர் தலையில் காயமடைந்த நிலையில் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வருவதற்கு ஐ. சி. ஆர். சி.யூடாக இவர் உதவி கோரியிருந்த போதும் ஐ. சி. ஆர். சி. எதுவித ஒத்த்ழைப்பையும் வழங்கவில்லை.

இது குறித்து அறிந்த நாம் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரை தொடர்பு கொண்டு அவரை வவுனியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளோம். ஓரிருதினங்களில் இரு படை வீரர்களும் வவுனியா வருவர் என எதிர்பார்க்கிறோம்.

இருபடை வீரர்களையும் ஆஸ்பத்திரி அதிகாரிகள் சிறப்பாக கவனித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply