மட்டு. குண்டு வெடிப்பு குறித்து வி. முரளிதரன் எம்.பி. கண்டனம்
மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக குண்டு வெடிப்பு இடம் பெற்றமைக்காக வி. முரளிதரன் எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக புதன் கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்ததுடன் 03 பாடசாலை மாணவர்களும், 10 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தர்வர்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கும் இறந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தொரிவிப்பதுடன் இது தொடர்பான சூத்திரதாரிகளைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் முரளிதரன் தெரிவித்ததாகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தட்சணாமூர்த்தி கமலநாதன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply