வடக்கில் துரித அபிவிருத்தி ஊடகத்துறை அமைச்சர்:லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்
வடக்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களில் இந்த விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் அபேரத்ன தெரிவித்தார்.
வடமாகாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்கான மகாநாடு தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்றது அங்கு வைத்தே அமைச்சர் இதனைக் கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், வடக்கில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதற் கட்டமாக ராமநாதன் சுடர் தீவுபுரம், அருணாசலம் வெற்றிபுரம், கதிர்காமர் எழுச்சிபுரம் போன்ற பெயர்களில் மூன்று விடுதலைக் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.
தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லை.; இந்திய அரசாங்கம் இலங்கைக்கு சார்பாகவே உள்ளது.
மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை மக்களின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
வடக்கில் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களுக்கான அரசாங்கத்தின் உணவுப் பொருள் விநியோகம் குறித்து இந்தியா திருப்தி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply