வன்னியில் இராணுவத்தால் மோதல் அற்ற பிரதேசம் உருவாக்கம்
விடுவிக்கப்படாத பிரதேசத்தில் தங்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்குடன் முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயப் பகுதியை இராணுவத்தினர் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு தேவிபுரத்தை மையமாகக்கொண்டு ஏ 35 பாதையில் புதுக்குடியிருப்பு- பரந்தன் பாதையையும் உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியையும், இருட்டுமடு முதல் தேவிபுரம் வரையிலான பகுதியையும் உள்ளடக்கிய பகுதியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தியுள்ளனர்.
பூச்சியம் சிவிலியன் காயம் (zero civilian casualty)எனும் கொள்கையுடைய இராணுவத்தினர் விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்புக்கும் நோக்குடனே இப்பகுதி பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.
விடுவிக்கப் படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பிரதேசத்துக் குள் வருமாறு வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானம் மூலம் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
இப்பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய நுளைவாயிலகளும் இத்துன்டுப்பிரசுரம் மூலம் மக்களுக்கு தெரிவித்துள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply