தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர் விமான நிலையத்தில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளரான ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துப் பொலிசார் கைது செய்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பாதுகாப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்படும் ஊடகவியலாளருக்னகான அடையாள அட்டையை தவறான முறையில் பயன்படுத்தி சிங்கப்பூர் செல்ல முயன்ற இவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கொழும்பில் இயங்கும் முக்கிய அலுவலகம் ஒன்றின் மூலமே இந்த ஊடக அடையாள அட்டை தனக்குக் கிடைத்ததாக கைதான சந்தேக நபர் பிரகாஷ் சக்தி வேலுப்பிள்ளை பொலிஸாரிடம் தெரிவித்தார்
சந்தேக நபரை நீதி மன்றத்;தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply