தமிழீழ விடுதலைப்புலிகள், சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்:ராதிகா குமாரசுவாமி

வடக்கே யுத்தத்தில் சிக்குண்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் ஐ. நா.சபையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.சபையின் நேற்றைய அமர்வின்போது ஐ.நா. சபை பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி இந்த விடயம் குறித்து விளக்கமளித்தார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள சிறுவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருக்கும் சிறுவர்கள் ஆகியோர் தொடர்பில் அவதான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகள், சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அத்துடன் அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கவும் மனிதாபிமான முறையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply