பாதுகாப்பு வலையத்திற்குச் செல்லுமாறு துண்டுப்பிரசுரம் : விமானப்படை
முல்லைதீவில் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி பொதுமக்களை வழிகாட்டுவதற்கான விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இலங்கை விமானப்படையினர் இப்பகுதிகளில் வீசி வருகின்றனர்.
அத்துடன் வன்னியில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பு வலையத்திற்கு வழிகாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவில் இருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் செயற்பட இணங்கியுள்ளனர்.
இராணுவத்தின் வன்னிக்கான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா பிராந்திய அதிகாரிக்கும் இடையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பொன்றின் பலனாகவே சர்வதே செஞ்சிலுவைச் சங்கத்துடன் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது பாதுகாப்பு வலையத்திற்குள் பொதுமக்களுடன் விடுதலைப் புலிகள் வரலாம் எனவும், அவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தலாம் எனவும் சுட்டிக்காட்டிய வன்னி பிராந்தியத்திற்கான கட்டளையிடும் தளபதி, விடுதலைப் புலிகள் இந்த வலையத்திற்குள் நுழையாதிருப்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களடங்கிய அறிக்கையொன்றைத் தமக்கு சமர்ப்பிக்குமாறும் இராணுவத்தின் வன்னி பிராந்தியத்திற்கான கட்டளையிடும் தளபதி சர்வதேச செஞ்சிவைச் சங்கத்தின் பிரதிநிதியிடம் இந்தச் சந்திப்பின்போது வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply