காயமடைந்த இராணுவப் படைவீரரை படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்
அண்மையில் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த இராணுவப் படைவீரர் ஒருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
லான்ஸ் கோப்ரல் ஏ.எம்.டி.எஸ்.புஸ்பகுமார (416451) என்ற படைவீரரே இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோதல்களின்போது காயமடைந்த குறித்த படைவீரர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படைவீரருக்கு மேலதிக சிகிச்சைகள் வழங்கும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply