பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கருத்தை புலிகளின் முகவர் அமைப்பான பிரித்தானிய தமிழர் ஒன்றியம் கண்டித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் நிலை தொடர்பாக பிரித்தானிய பிரதமரின் கருத்துக்கு முரண்பாடாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் வெளியிட்ட கருத்தை புலிகளின் முகவர் அமைப்பான பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஜனவரி 14ஆம் தகதி இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பிரதமர் “இலங்கையில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் தொடர்பாக (திரு. வாஸ்) அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான் உடன்படுகின்றேன். அத்துடன் யுத்த நிறுத்தத்தின் தேவைபற்றிய அவரது கருத்துடனும் நான் உடன்படுகின்றேன். ஜனாதிபதி சாக்ரோயுடனும் சான்சிலர் மேக்லுடனும் பேசும் போது இதுகுறித்தும் பேசவுள்ளேன்”எனத் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக வெளிவிவகார அமைச்சின் கருத்து உள்ளது.

வெளிவிகார அமைச்சின் அறிக்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பான கோரிக்கை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ” அவர்கள் கடந்த பத்துநாட்களுக்கு மேலாக சர்வதேச உதவிகளை பெறுவதில் இருந்து முற்றாகதுண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள்…. பாதிக்கபட்ட பிரதேசங்களில் உள்ளபொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய ஏதுவாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்” எனத் தெரவிக்கப்பட்ட கருத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின்கருத்து முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

‘இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல்’ என்ற பதத்தை பாவித்து வன்னியில் ஏற்பட்டிருக்கும் பாரிய மனித அவலம் பற்றிய உண்மை நிலவரம் மூடிமறைக்கப்பட்டிருப்பதோடு சில மேற்குலக நாடுகள் இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைளுக்கு இராஜதந்திர பாதுகாப்பு வழங்க முற்படுகின்றன என பிரித்தானிய தமிழர் ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply