பாதுகாப்பு வலயத்தை இராணுவம் தாக்கவில்லை: ரம்புக்வெல

வன்னியில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தாக்குதல்களை நடத்தமாட்டார்கள் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 
 பாதுகாப்புத் தரப்பினர் ஷெல் தாக்குதல்களை நடத்தவேண்டுமெனின், ஏன் அவர்கள் பொதுமக்களுக்கென பாதுகாப்பு வலயமொன்றை அமுல்படுத்த வேண்டும்” என அவர் கேள்வியெழுப்பினார்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் பெருமளவிலான பொதுமக்கள் ஷெல் தாக்குதல்களில் கொல்லப்படுவதாகக் கூறப்படுவதில் எந்தவிமான உண்மையும் இல்லையென அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்திடம் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் கைக்கொள்ளும் உத்தியே இது என அவர் கூறினார்.

இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய முற்பட்ட பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

எனினும், அரசாங்கத்தால் பிகரடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது இராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்களாவது கொல்லப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை வரையில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் 67 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply