தமிழீழம் வேண்டாம் தம்மையும் தமது பிள்ளைகளையும் நிம்மதியாக வாழவிட்டாலே போதும்:இடம்பெயர்ந்த பொதுமக்கள்
பொதுமக்கள் இடம்பெயர்ந்த பகுதியில் இருந்து புலிகள் ஏவும் ஷெல் தாக்குதலினாலேயே அரச படைகளும் அப்பகுதியை நோக்கி திருப்பி தாக்குதல் நடாத்துகின்றனர் என்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வெளி உலகிற்கு மக்கள் இழப்புபற்றி அனுதாபத்தை தேடும் நோக்கோடு புலிகள் செய்துவரும் பிரச்சாரம் முல்லைத்தீவு அரச அதிபரின் கருத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
திட்டமிட்டபடியே குடிபெயர்ந்த மக்கள் பகுதியில் இருந்து ஷெல்களை ஏவும் புலிகள் இராணுவத்தின் பதில் தாக்குதலை வேண்டும் என்றே அழைத்து பொதுமக்களுக்கு அழிவை தேடுகின்றனர். மொத்தத்தில் பொதுமக்களை ஈவிரக்கமின்றி கவசமாக பாவிக்கும் புலிகள் அவர்களை மரணத்தின் விழிம்பில்தள்ளி அதன் மூலமாவது தம்மை தப்பவைக்கலாம் என்று கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
யுத்த முனையில் அரச படைகளை எதிர்கொள்ள திராணியற்ற புலிகள் தந்திரோபயம் என்று பின்வாங்கி பின்வாங்கி இன்று மக்களுக்குள்ளேயே தாம் ஒழிந்துகொண்டு இன்று மக்களுக்கு அழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர். எந்த மக்களுக்கு விடுதலை என்று புறப்பட்டார்களே இன்று அதேமக்களை கைதிகளாக்கி அவர்களது சுதந்திரத்தை மறுத்து மனித கேடயங்களாக்கி அவர்களது கொலைக்கு வழிதேடுகின்றனர். தமிழீழம் வேண்டாம் தம்மையும் பலாத்காரமாக பறித்து செல்லும் தமது பிள்ளைகளையும் நிம்மதியாக வாழவிட்டாலே போதும் என்ற விரக்தியின் விழிம்புக்கே வந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply