விடுதலைப்புலிகள் கல்மடுக்குள அணைக்கட்டை உடைத்து பொதுமக்களுக்கு கடும் ஆபத்தை விளைவித்துள்ளனர்
பல முனைகளில் தாக்குதல் நடத்தி விஸ்வமடு பகுதியை நோக்கி நகரும் படையினரைத் தடுக்க விடுதலைப்புலிகள் நேற்று காலை கல்மடுக்குள அணைக்கட்டை உடைத்துள்ளதாக முல்லைத்தீவு களத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மணிதபிமான மற்ற பயங்கரவாதச் செயலாகும் இப்பகுதியில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பொதுமக்களை வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே இப்பயங்கரவாதச் செயலைச் செய்துள்ளனர்.இதை முழு உலகமும் கன்டிக்க வேன்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்மடுவுக்கும் நெத்தலியாறுவுக்கும் வடகிழக்காகவும் உள்ள பகுதியில் நேற்று விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதலை நடத்தி இப்பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஏ௩5 பாதையூடாக ராமனாதபுரம்,தர்மபுரம் மற்றும் விஸ்வமடு பகுதியூடாக ஓடும் இவ்ஆற்றின் குளக்கட்டையே பயங்கரவாதிகள் உயர் சக்திமிக்க வெடி பொருட்களை பாவித்து தகர்த்துள்ளனர்.இது பயங்கரவாதிகளின் கீழ்தரமான போர்யுக்தியாகும் என படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகளின் பிடியில் எதுவித உதவிகளுமின்றித் தவிக்கும் பொதுமக்களுக்கு இது மேலும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக பாதுகாப்பு அவதானிகள் தெரிவித்தனர். இதே போன்று படையினர் கிளிநொச்சியை நோக்கி பலமுனைகளில் தாக்குதல் நடத்திய போது இரணமடுக் குளத்தை உடைக்க முற்பட்டார்கள் எனவும் பாதுகாப்பு அவதானிகள் மேலும் தெரிவித்தனர்.
கல்மடுக்குழம் 4.5 கி.மீ. சதுரப்பரப்பளவு உடையது.நீர்பாசனத்தினைக்களத்தின் தகவல்களின் படி 500 எக்கர் நிலப்பரப்பையுடையது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply