இன்று இந்தியாவின் 60வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது

இந்தியாவின் 60வது குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் இன்று காலை முதல் நிகழ்ச்சியாக 9.45 மணி அளவில் அமர்ஜவான் ஜோதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி அஞ்சலி செலுத்தினார். குடியரசு தின விழாவில் லட்சகணக்கான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜ் பாத்திலிருந்து விழா மேடை அருகே, இன்றைய சிறப்பு விருந்தினர் கஜகஸ்தான் அதிபர் நசர்பை மற்றும் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோரை பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி வரவேற்றார்.

பின்னர் தேசிய கொடி ஏற்றப்பட்டது. 24 முறை பீரங்கி முழங்கி, தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வீரதீர செயல் புரிந்த ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன. விருது வழங்கும் நிகழ்வினை தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்றது. முதன்மையாக பீரங்கி உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது வானில் நான்கு ஹொலிகாப்படர்கள் பறந்து வந்து, மூவர்ண புகையை வெளியிட்டு வர்ண ஜலாம் காட்டின.

இராணுவ வீரர்கள், போலிசார் மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகளும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் இடம் பெற்றன. இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகளை தொடர்ந்து 11.40 மணி அளவில் விழா நிறைவு பெற்றது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply