இலங்கைத் தமிழர் பாதுகாப்பை உறுதி செய்வதே எனது விஜயத்தின் நோக்கம்:இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி
இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே தனது இலங்கை விஜயம் அமையும். அதே சமயம் புலிகள் அமைப்பின் பயங்கரவாதச் செயல்களை தமது நாடு ஒரு போதும் அனுமதிக்கப்ப போவதில்லையென இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இலங்கை புறப்படுவதற்கு முன்னர் புதுடில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
வடக்கில் இடம்பெறும் யுத்தத்திலிருந்து சிவிலியன்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பது தொடர்பில் இலங்கை அரசுடன் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாகவிருந்தாலும் சிவிலியன்கள் நலன் குறித்து இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. எனவும் தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் புறப்படுவதற்கு முன்னர் தமிழக முதல்வர் மு. கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு தனது இலங்கை விஜயம் தொடர்பாக பேசியுள்ளார். கருணாநிதி தற்போது சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பையேற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply