முல்லைத்தீவை முழுமையாக மீட்க இராணுவம் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சு

முல்லைத்தீவில் எஞ்சிய பகுதியிலிருக்கும் விடுதலைப் புலிகளை நோக்கி இராணுவத்தினர் வடகிழக்கு கரையோரப் பகுதியூடாக முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.  சாலை களப்புப் பகுதியை நோக்கி கரையோரமாக இராணுவத்தினரின் 55வது படைப்பிரிவு முன்னேறி வருவதாகவும், கடற்புலிகளின் பலமான இறுதி முகாமாக எஞ்சியுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடபகுதியிலுள்ள 58வது படைப்பிரிவு, 55வது படைப்பிரிவுடன் இணையும் நோக்கில் தாக்குதல்களை நடத்திக்கொண்டு சாலைப் பகுதியை நோக்கி முன்னேறி வருவதுடன், 57வது படையணி விஸ்வமடுப் பகுதியை நோக்கியும் முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

57வது படையணிக்கு அடுத்ததாக பணியிலிருக்கும் விசேட படையணி 3 விஸ்வமடு தென்பகுதியின் எல்லையை அடைந்திருப்பதுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதலில் இராணுவத்தினர் விஸ்வமடு குளத்தின் தென்கிழக்குப் பகுதியை மீட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட பகுதியில் ஏழு பாரஊர்திகளின் பெட்டிகளையும், இரண்டு கட்டடங்களையும், 500 ஆட்லறி எறிகணைகளின் கோதுகளையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், விசேட படையணி௩ற்கு அடுத்ததாகவுள்ள விசேட படையணி நான்கு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியை அண்மித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply