ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனை இன்று ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ நியூயோர்க்கில் சந்தித்துள்ளார்

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூனிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நியூயோர்க் நகரில் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது வடக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பசில் ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் மக்களுக்கு அனுமதியளிக்குமாறு அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்திருந்த கோரிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்தமையையும் இதன்போது பசில் ராஜபக்ஷ பான் கீ மூனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இதேவேளை ஜனநாயக ரீதியான தேர்தல் முறையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றினை ஏற்படுத்த ஜனாதிபதி சிறப்பாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ஆலோசகர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பொருட்டும், பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கோரியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply