முல்லைத்தீவு நகரின் வடக்காக படை நகர்வு: பிரிகேடியர் நந்தன உடவத்தை
முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றிய இராணுவத்தின் 59 ஆவது படையணி முல்லைத்தீவு நகருக்கு வடக்காக மேலும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னேறியுள்ளதாக இந்தப் படைப் பிரிவின் பிரிகேடியர் நந்தன உடவத்தை தெரிவித்தார்.முல்லைத்தீவு வடக்காக உள்ள வடுவாக்கல் கிராமம் வரை படையினர் முன்னேறியுள்ளனர். தற்போது இராணுவத்தின் 59 ஆவது படைப் பிரிவு புதுக்குடியிருப்பை அண்மித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெலிஓயாவிலிருந்து முல்லைத்தீவு வரையான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்தப் படையணி இதுவரை 604 கிலோ மீட்டர் நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 5304 கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருக்கலாமெனத் தெரிவித்த பிரிகேடியர், புலிகளின் தொலைத் தொடர்பை ஒட்டுக்கேட்ட போது 2041 புலிகள் கொல்லப்பட்டமையும் 2981 பேர் காயமடைந்தமையும் தெரிய வந்துள்ளது.
படையினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் 196 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. முல்லைத்தீவு நகரின் வடபகுதியில் இடம்பெற்ற மோதல்களின்போது 32 புலிகள் கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் தரப்பில் இந்த மோதலின் போது 10 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply