இலங்கையில் அதிகரித்திருக்கும் மோதல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டுள்ளது
இலங்கையில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் அதிகரித்துச் செல்லும் மனிதநேயப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் அதிகரித்திருக்கும் மோதல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார். இலங்கையின் வடபகுதியில் தொடரும் மோதல்களால் பாரிய மனிதநேயப் பிரச்சினை தோன்றியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இலங்கையில் மோதல்களில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இரட்டிப்பாக்குமாறு இலங்கையின் நண்பர்கள் எனும் அமைப்பின் உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமான ஜியோவெஃரி வான் ஓர்டன் தெரிவித்தார்.
மனிதநேயப் பிரச்சினைகள் அங்கு அதிகரித்துச் சென்றுள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் காசாவில் நடந்தைப் போன்றே இலங்கையிலும் நடக்கும். உதவிகள் கிடைக்கும் என மாத்திரமே மக்களால் நம்பமுடியும்” என பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அங்கு என்ன நடைபெறுகிறது என சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்தால் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்” என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் நிர்ஜ் தேவா விடுத்த வேண்டுகோளுக்கே, மேற்கண்டவாறு அவர் பதிலளித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply