முல்லைத்தீவில் மருந்துத் தட்டுப்பாடு இல்லையாம்: நிமால் சிறிபால.டி.சில்வா

முல்லைத்தீவில் மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா மறுத்துள்ளார்.  
 வன்னிக்கு சாதாரணமாக குறிப்பிட்டளவு பங்கு மருந்துப்பொருள்கள் வழமையாக அனுப்பிவைக்கப்படுவதாகவும், அந்தப் பகுதி மருந்துப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும்  இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

பொதுமக்களுக்கு மருந்துப் பொருள்கள் செல்லவிடாமல் விடுதலைப் புலிகளே தடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதனாலேயே வன்னியில் மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், முல்லைத்தீவில் பாதிக்கப்படும் மக்களுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அங்கு அனுப்பிவைப்பதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அங்கு சென்று மருத்துவ உதவிகளை வழங்க பல வைத்தியர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

முல்லைத்தீவை இராணுவத்தினர் இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளடமிருந்து முற்றாக மீட்டுவிடுவார்கள் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன் பின்னர் அப்பகுதிக்கு தடையின்றி மருந்துப் பொருள்களை அனுப்ப முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply