ஐநாவில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த தென்னாபிரிக்காவின் மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூக்கா இந்தப் பிரேரணையை  முன்வைக்கவுள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், மேலதிக தகவல்களை யஸ்மின் சூக்கா அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நேற்றுமுதல் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதாகவும், அது தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியமித்த நிபுணர் குழுவின் அங்கத்தவர்களில் யஸ்மின் சூக்கா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ளுமாறு இதுவரை இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply