பூந்தமல்லி முகாமில் உண்ணாவிரதமிருந்த இலங்கையர் வைத்தியசாலையில்

பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை பொலிசார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைத்தனர். அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் செந்தூரன் என்பவரை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றினார்கள்.

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று செந்தூரன் கடந்த 6-ந் திகதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். கடந்த சில தினங்களாக தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த நிலையில் 25.08.2012 அன்று செந்தூரனின் உடல் நலம் குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து 25.08.2012 அன்று இரவு பொலிசார் விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரனை வேனில் ஏற்றினார்கள். அவரை சென்னை அரசு வைத்தியசாலைல் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply