வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு

வன்னி மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நாடாளுமன்ற ஆசனம் மொனராகலை மாவட்டதிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.  வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்ட ரீதியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வருடாந்தம் தீர்மானிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 2010 மற்றும் 2009ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளது.

2009ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 707 பேர் வசித்ததாக கணிப்பிடப்பட்டது.

எனினும் 2010ம் ஆண்டு 2 லட்சத்து 36 ஆயிரத்து 449 பேராகவும்இ 2011ம் ஆண்டில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 409 ஆகவும் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ல் இருந்து ஆறாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply