வடக்கு மாகாண சபைத் தேர்தல்களை ஏன் நடத்த முடியாது ?

வடக்கு மாகாண சபைத் தேர்தல்களை ஏன் நடத்த முடியாது என க்ளோபல்தமிழ் போரம் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் மூன்று தேர்தல்களில்வாக்களித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும்உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள்இ தொழிற்சங்கப் போராட்டங்கள்உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் க்ளோபல் தமிழ் போராம் கருத்து வெளியிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதனால்பாரிய பாதிப்பு ஏற்படக் கூடுமென க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் மக்கள் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்துவருவதாகவும், ஜனநாயக உரிமைகளை முடக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply