சீன வீதி விபத்தில் குறைந்தது 36 பேர் பலி

சீன அதிவேக வீதியில் இன்று இடம்பெற்ற பாரிய வீதி விபத்தின் காரணமாக, குறைந்தது 36 பேர் ஸ்தளத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் தாங்கி ஒன்றும் இரட்டைத் தட்டு பெருந்து ஒன்றும் நேருக்க நேர் மோதியதைத் தொடர்ந்து, இருவாகனங்களும் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் சின்குவா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வாகனங்களில் பயணித்த 39 பேரில் 3 பேர் மட்டுமே உயிர் தப்பி இருப்பதாகவும், அவர்களும் பாரதூரமாக காயமடைந்த நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.

சடலங்கை மீட்புப் பணியாளர்கள் பெரும் சிரமத்தின் பின்னர் வாகன இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வீதி விபத்துக்களில் சீனாவில் வருடாந்தரம் ஏராளமான உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply