வடக்கில் அஞ்சல் வாக்கு பதிவை கவனிப்பதற்கு 150 அதிகாரிகள்
மூன்று மாகாண சபைகளின் தேர்தலை முன்னிட்டு வடக்கில் அஞ்சல் மூல வாக்களிப்பு பணிகள் தொடர்பில் ஆராய்வதற்கு 150 அதிகாரிகளை அங்கு அனுப்புவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த அதிகாரிகள் நேற்று வடக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்றும் நாளையும் அஞ்சல் மூல வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது அஞ்சல் மூல வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள தவறுபவர்களுக்கு எதிர்வரும் 7 ம் திகதி வாய்ப்பளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply