எண்ணெய் கசிவினால் 450 மில்லியன் டொலர்கள் ​சேதம்

பாணந்துறை கடலில் மூழ்கிய சைப்பிரஸ் கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய்கசிவு ஏற்பட்டு வருவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் எஸ்.ஆர்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தெஹிவளை, வெள்ளவத்தை, மற்றும் மேற்கு கடற்பிராந்தியத்தில் எண்ணெய்ப் படையொன்று தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரேக்கத்தில் பதிவு செய்யப்பட்ட எம்.வி தேர்மோபிலி சியாரா என்ற கப்பல், வர்த்தக நிலுவை காரணமாக 2007 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முற்றாக மூழ்கியது.

கேழ்வு கட்டணங்களை செலுத்த முடியாமை காரணமாக அந்தக்கப்பலால், இலங்கையிலிருந்து வெளிச்செல்ல முடியவில்லை.

எனினும், அதிலிருந்து வெளியேறும் எண்ணெய் கசிவினால் 450 மில்லியன் டொலர்கள் அளவில் சேதங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்படடுள்ளது. இதன்காரணமாக மீனினங்கள் உட்பட்ட கடல்வளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply