இலங்கை அரசின் யுத்த நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் மதிக்கவில்லை : அமைச்சர் அன்பழகன்

இலங்கை அரசின் 48 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பைப் புலிகள் மதிக்கவவில்லையெனத் தமிழக நிதியமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான க. அன்பழகன் சட்டமன்றத்தில் இன்று  தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தலையீட்டின் பேரில் இலங்கையிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றும் வகையில் 48 மணி நேர யுத்த நிறுத்தமொன்றை இலங்கை அரசு செய்துள்ளது.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை. போர் இடம் பெறும் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற புலிகள் இன்னும் அனுமதிக்கவில்லை. இது ஆச்சரியத்தைத் தருகிறது.

புலிகள் பகுதியில் பாதுகாப்பாக இருக்கலாமென்று கருதியே தமிழ் மக்கள் அந்தப் பிரதேசத்துக்குச் சென்றனர். ஆனால் அங்கு இடம்பெறும் இருதரப்புச் சண்டை காரணமாக அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply