மகேஸ்வரன் கொலை சந்தேக நபருக்கு தூக்கு தண்டணை

ஐக்கிய தேசியக் கட்சயின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தி.மகேஸ்வரன் கொலை சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மகேஸ்வரன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான ஜோன் ஸ்ரன் கொலின் வெலன்ரினோ எனப்படும் வசந்தன் என்பவருக்கே மரணை தண்டணை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நான்கரை வருடங்களாக இந்த கொலை வழக்கு இடம்பெற்று வந்தது.

தியாகராஜா மகேஸ்வரன் 2008ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பில் பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக 2004ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.

யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த இவர் பெரும்பான்மை சிங்களவர்கள் உள்ள அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தாலும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு பெரும் பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply