யாழில் 2006இல் காணாமற்போன 462 பேரின் நிலை என்ன ?

யாழ்ப்பாணத்தில் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் 462 பேரின் நிலை என்னவானது என்பது குறித்து தெரியப்படாத நிலையில் அதே ஆண்டு 280 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் யாவுமே தற்பொழுது வடக்கு மகாண ஆளுனராக இருக்கும் மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ் மாவட்ட இராணுவத்தளபதியாக இருந்த பொழுதே இடம்பெற்றுள்ளன.

2006ஆம் ஆண்டு இராணுவத்தின் முழுமையான கடுமையான கட்டுப்பாடு நிலவியது. அத்துடன் ஊரடங்கு சட்டமும் அமுலில் இருந்தது. அந்த நாட்களிலேயே கொலைஇ கொள்ளை முதலிய குற்றச் செயல்கள் யாழ்ப்பாணம் முழுவதும் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் இடம்பெற்று வந்தன. இக் காலத்தில் காணமல் போனவர்கள் கொல்லப்பட்டவர்கள் பற்றிய அதிர்ச்சியான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திற்கு 590 முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. இவர்களில் 128 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் ஏனைய 462 பேரில் 272 பேர் வீடு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய 190 பேர் பற்றி ஆனைக்குழுவுக்கும் தகவல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

2006ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கொலை, கடத்தல், கொள்ளை, காணாமல் போதல் முதலிய சம்பவங்களில் இராணுவத்திற்கும் அவர்களுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாக சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் பலவும் சுட்டிக் காட்டியிருந்தன.

இக்காலப் பகுதியில் காணாமல் போயும் சுட்டுக் கொலை செய்யப்பட்டும் 742 பேர் காணாமல் போயுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு பலர் மர்மமாகவும் அறியப்படாத வகையிலும் கூட கொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் காணாமல் போனவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் அவர்களின் பெற்றோர்களும் உறவுகளும் தொடர்ந்து தேடிய வண்ணமுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply