இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சி – இந்தியா அறிவிப்பு

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும் என இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் எம்.எம்.பால்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது எனதமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ராஜூ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நட்பு நாடு எனவும், தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில சந்தர்ப்பங்களில் மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply