சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரை அம்பலப்படுத்த வேண்டும்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் மில்லியன் கணக்கான பணத்தை வைப்பிலிட்டவர்கள் பற்றிய தரவுகளை முடிந்தால் வெளியிடுமாறு, ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த அராங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பு பொதுநூலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2002ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் 22.9 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை இலங்கையர்கள் வைப்புச் செய்திருந்ததாகவும், 2011ம் ஆண்டில் 85 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநேகமானவை சேமிப்புக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல்களினால் பல மில்லியன் பொதுமக்கள் பணம் விரயமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணம் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டனவா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலகமாக நாட்டில் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார உடன்படிக்கைகளை கவனிக்கும் போது முறைகேடுகள் இடம்பெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply