மக்களிடையே இனவாத உணர்வுகளை தூண்டிவிட முயற்சி

நாட்டு மக்களிடையே, இனவாத உணர்வுகளை தூண்டி தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

எனினும், நாட்டில் செய்நன்றியுள்ள மக்கள் மீண்டும் எந்தவொரு தருணத்திலும் இனவாதிகளுக்கு நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இனவாத கருத்துக்களை வெளியிட்டு மக்கள் கிளர்ந்தெழச் செய்வதன் மூலம் நாடு பின்னடைவை எதிர்நோக்குமேயன்றி, அபிவிருத்திகளை காணாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் அபிவிருத்திகளை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நாட்டை ஒரு போதும், பின்னோக்கி நகரச்செய்வதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply