வெள்ளவத்தை முக்கொலை சந்தேக நபரின் மருத்துவ அறிக்கை பெற உதவுமாறு கோரிக்கை
வெள்ளவத்தையில் மூன்று கொலைகள் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் இடம்பெற்றது
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள குமாரசுவாமி பிரசான் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இணக்கம் வெளியிட்டமையை வெள்ளவத்தை காவல்துறையினர் மன்றில் எடுத்துக்கூறினார்
இதன் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவரின் மனநிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொடுக்க உரிய வசதிகளை செய்து தருமாறு வெள்ளவத்தை காவல்துறையினர் மன்றின் அனுமதியை கோரினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply