இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒன்பது பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.
மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைக் கிளைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்இ யுனிசெப் உள்ளிட்ட சிலவற்றின் ஊடாக இந்த உதவிகளுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply