3200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 3200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாம் இசெட் புள்ளிகள் காரணமாக அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தொடர்ந்தும் முறைப்பாடு கிடைத்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
இசெட் புள்ளி விவகாரத்திற்கு தீர்வு காணப்படும்வரை பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும் என கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply